குதிகால் வெடிப்பா? மவுத் வாஷை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

குதிகால் வெடிப்பு கால்களின் அழகை கெடுக்கும் வகையில் வருவது தான்.

குதிகால் வெடிப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

குதிகால் வெடிப்பு ஒருவருக்கு இருந்து, அதனை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால் இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம். தற்போது அதனை பார்ப்போம்.

தேவையானவை
  • லிஸ்டெரின் மவுத் வாஷ் - கால் கப்
  • வினிகர்- கால் கப்
செய்முறை

முதலில் மவுத் வாஷ் மற்றும் வினிகரை சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள்.

ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்புங்கள்.

அதில் இந்த மவுத் வாஷ் கலவையை கலக்கி உங்கள் பாதத்தை மூழ்க வையுங்கள்.

20 நிமிடம் கழித்து உங்கள் பாத்தை ஸ்க்ரப் செய்யவும். வெடிப்பு உடனடியாக மறைந்து பாதம் மிருதுவாகும். வாரம் ஒருமுறை செய்தால் மெத்தென்ற பாதம் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers