முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ பயனுள்ள டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

இன்றைய பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை தான் முடி உதிர்வு.

கூந்தல் உதிர்தலானது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியது. அதிலும் பருவக்கால மாற்றம் முதல் ஆரோக்கியமற்ற உணவு முறை வரை அனைத்தும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது.

இதற்கு வீட்டின் சமையலறையிலேயே பல பொருட்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி முடி உதிர்வு கட்டுப்படுத்த முடியும். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

 • வெந்தயத்தை நீரில் நன்கு ஊற வைத்து அரைத்து, அதனை கூந்தலில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

 • வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குளிர வைத்து, அதில் கூந்தலை அலசினால், கூந்தல் பிரச்சனைகளை அகலும்.

 • சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, கூந்தல் உதிர்தலைத் தடுக்கும். மேலும் இது கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் ஸ்காப் பிரச்சனைகளை நீக்கும்.

 • எலுமிச்சை சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து அலசினால், கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு, பொடுகு போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

 • வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் உதிர்வது நின்று, கூந்தல் நன்கு பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

 • வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

 • தேங்காய் எண்ணெய்/பாலைக் கொண்டு கூந்தலை நன்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் வறட்சி நீங்குவதோடு, கூந்தலும் பட்டுப் போன்று வளரும்.

 • விளக்கெண்ணெய் கொண்டு கூந்தலை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

 • பூந்திக் கொட்டை பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் குறையும்.

 • தயிரை எலுமிச்சை சாறு அல்லது தேனுடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட வேண்டும்.

 • பாலைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் மென்மையாகவும், வலுவுடனும் இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

 • பூண்டிலும் சல்பர் அதிகம் உள்ளது. ஆகவே இதன் சாற்றினைக் கொண்டு கூந்தலைப் பராமரிக்கலாம்.

 • கொய்யாவை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

 • செர்ரிப் பழத்தில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பயோஃப்ளேவோனாய்டு அதிகம் உள்ளது. எனவே அதனை மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்