முடி உதிர்தல் முதல் பொடுகு பிரச்சினை வரை தடுக்க வேண்டுமா? இந்த ஹேர் மாஸ்க் மட்டும் யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

இன்றைய சந்ததியினரிடையே முடி உதிர்வு பெரும் தலையிடியாகவே உள்ளது.

எத்தனையே மருந்துகள், செயற்கை முடி வளர்சியை தூண்டும் எண்ணெய்கள் இருந்தாலும் இயற்கை முறையும் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை தூண்ட செய்வதே சிறந்ததாகும்.

இதற்கு சிறந்த தீர்வாக பசலை கீரை பெரிதும் உதவி புரிகின்றது.

பசலைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி யின் ஆதாரமாக உள்ளது. இந்த வைட்டமின்கள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து தலைமுடிக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது.

இது முடி உதிர்தல் முதல் பொடுகு தொல்லை வரை சகல பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது.

அந்தவகையில் பசலைகீரையை வைத்து முடி வளர்சியை எப்படி துண்ட செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • நறுக்கிய பசலைக் கீரை 3 கப்
  • பிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன்
செய்முறை

பசலைக் கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் போடவும். அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைக்கவும்.

இந்த கலவையுடன் ரோஸ்மேரி இலைகளை கலக்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்து தலையில் தடவவும்.

அரை மணிநேரம் ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும்.

ஒரு வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை பின்பற்றவும்.

பசலை கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைகிறது, இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது , முடி உதிர்தல் குறைகிறது, பொடுகு குறைகிறது.

மேலும் இளநரையைப் தடுக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்கள் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தி நல்ல தீர்வை தருகின்றது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers