குழந்தை பிறந்ததும் முகம் பொழிவிழந்து விட்டதா? அப்போ இந்த ஸ்க்ரப் யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் சம நிலையற்ற ஹார்மோன்களால சிலருக்கு முகம் முழுவதும் கருமைடைந்துவிடும்.

கழுத்துப் பகுதியும் முகமும் கருப்பாகி, முகப்பருக்கள் திடீரென அதிகரித்து முகத்தின் பொலிவையே இழந்துவிட செய்கின்றது.

இதில் இருந்து எளிதில் விடுபட அன்னாசி பழம் பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் இழந்த சருமத்தை மீண்டும் எளிதில் பெற கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பேஸ் மாஸ்க்கை போட்டால் போதும். தற்போது அவற்றை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • அன்னாசி துண்டுகள் - 1 கப்
  • வாழைப்பழம் - அரை துண்டு
  • சர்க்கரை - 1 கப்
  • தேங்காய் எண்ணெய் - 1 கப்
  • ரோஜா இதழ் - சில
செய்முறை

முதலில் அன்னாசியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கி அதன் மேல் ரோஜா இதழை தூவி வைத்துக் கொள்ளுங்கள்.

குளிப்பதற்கு முன் இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

இதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால், உடலில் திடீரென உண்டான கருமை மறைந்து மிருதுவாக மாறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்