முகத்தின் அழகை கெடுக்கும் கருவளையத்தை போக்க வேண்டுமா? இதோ சில எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

முகத்திற்கு அழகே இரு கண்கள் தான். ஆனால் பொதுவாக சிலருக்கு முகத்தின் அழகினை கெடுக்கும் வகையில் கருவளையங்கள் காணப்படுவதுண்டு.

உண்மையில் கருவளையங்கள் வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.

அதில் குறிப்பாக அதிக வேலைப்பளு காரணமான உடல் சோர்வும், சரியான துக்கமில்லமையும், நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதனாலும் நமது உடல் களைப்படைகிறது. உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களின் கருவளையம் நமக்கு உணர்த்துகிறது.

அந்தவகையில் இதில் இருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதும். கருவளையம் சீக்கிரம் மறைந்து விடும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • வெள்ளரிக்காய் பிழிந்து அதன் சாற்றை, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இச்சாற்றை கண்களில் மசாஜ் செய்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு குளிர்ந்த நீரில் அதை கழுவவும். கண்கள் பிரகாசிப்பதை உடனே காணலாம்.
  • பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து தினம் இரவு கண்களைச் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.
  • சிறிய அளவு காட்டனை ரோஸ் வாட்டரில் நனைத்து 15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இது கண்சோர்வை குறைக்கும்.
  • 4 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி சமையல் சோடாவை ஒன்றாக கலக்கவும். அதை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், கண்களைச் சுற்றி இந்த குளிர்ந்த கிரீம்மை மாஸ்க் போல் பயன்படுத்துங்கள். 20-25 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • 5 முதல் 10 நிமிடங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் சில தேநீர் பைகளை வைக்கவும். பின்னர் 10-15 நிமிடங்கள் உங்கள் கண்களில் இந்த குளிர்ந்த தேநீர் பைகளை வைக்கவும். இது உங்கள் கண்களை சுற்றியுள்ள வீக்கம் மற்றும் கருவளையத்தை நீக்கும்.
  • கடலைமாவில் எலுமிச்சைக்சாறு கலந்து பசை போல் குழைத்து கருவளையங்களின் மேல் தினமும் தடவி வந்தால் நாளடைவில் கருவளையம் மறையும்.
  • கருவளையம் மறைய முல்தானி மட்டியையும் பன்னீரையும் குழைத்துப் புசி வரவும்.
  • கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.
  • எலுமிச்சை மற்றும் தக்காளி இவற்றின் சாறை ஒன்றாக கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.
  • ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி, முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்