ஆயுர்வேத முறையில் நரைமுடியை கருகருவென மாற்ற வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in அழகு
869Shares

இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

நரைமுடி வருவதற்கு பரம்பரையும் ஒரு முக்கியமான காரணம் என்று நமது பெரியோர்கள் கூறுகின்றனர்.

உண்மையில் நரைமுடிகள் வர மரபியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.

அந்தவகையில் ஆயுர்வேத முறைப்படி நரை முடியினை கருமையாக மாற்ற கீழ் குறிப்பிட்ட முறைப்படி செய்தாலே போதும், முடி கருகருவென மாறிவிடும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • நல்லெண்ணெய்
  • கரட் ஜூஸ் - (இரண்டையும் சமமான அளவு எடுத்து கொள்ளுங்கள்)
  • வெந்தயம் - ஆயில் மற்றும் ஜூஸில் 1/ 2 மடங்கு
பயன்படுத்தும் முறை

நல்லெண்ணெய், வெந்தய பொடி மற்றும் கரட் ஜூஸ் மூன்றையும் ஒரு சுத்தமான பாட்டிலில் கலக்கவும்.

இதை 21 நாட்களுக்கு வெயிலில் வைத்திருக்க வேண்டும்.

பிறகு இதை 21 நாட்களுக்கு தலை மற்றும் கூந்தலில் தடவி வாருங்கள். இதை 3 மாதத்திற்கு பயன்படுத்தி வரவும்.

இந்த டானிக் உங்கள் தாடி, புருவம், மீசையிலுள்ள இளநரையை கூட போக்கும்.

இந்த டானிக்கையை வெயிலில் வைப்பதற்கு காரணம் இதிலுள்ள தண்ணீரை அது உறிஞ்சி கொள்ளும், மேலும் கிருமிகள் எதாவது இருந்தால் 6 மணி நேர சூரிய ஒளியில் அழிந்து விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்