பெண்களின் மொத்த அழகையும் கெடுப்பதற்கு கண்களுக்கு அடியில் வரும் கருவளையமும் ஒன்றாகும்.
குறிப்பாக கருவளையம் ஏற்பட பல காரணங்கள் அதில் தூக்கமின்மை, குறைவான வெளிச்சத்தில் படிப்பது, இரவில் அதிக நேரம் ஸ்மார்ஃபோன்களை உபயோகிப்பது, லேப்டாம், சிஸ்டமில் அதிகம் நேரம் செலவிடுவது என காரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.
இதனை தடுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே சிறந்தது. தற்போது அதில் சிலவற்றை பார்ப்போம்.
தேவையானவை
- வெள்ளரிக்காய் துண்டு - 3
- உருளைக்கிழங்கு துண்டுகள் - 3
- தேன் - 1 டீஸ்பூன்
- கற்றாளை ஜெல் - 1 டீஸ்பூன்
செய்முறை
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
இதில் தேனும் கற்றாளை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும்.
மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.