15 நிமிடங்களில் முகத்தை அழகாக ஜொலிக்க வைப்பது எப்படி ? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

சிலருக்கு முகம் எப்பொழுதும் பொழிவிழந்து காணப்படும்.

இதற்காக நாம் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பூச வேண்டும் என அவசியமில்லை.

இயற்கை பொருட்களை கொண்டும் முகத்தினை அழகுப்படுத்த முடியும்.

தற்போது 15 நிமிடங்களில் முகத்தை அழகாக ஜொலிக்க வைப்பது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

  • அவகேடோ பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.
  • எண்ணெய் பசை சருமத்தினர் மேக்கப் போட்டால், விரைவில் களைந்துவிடும். எனவே இதனை தவிர்க்க, மேக்கப் போடும் முன், டோனர் பயன்படுத்தி பின் மேக்கப் போட்டால், மேக்கப் நீண்ட நேரம் நிலைக்கும்.
  • உதட்டில் கருமைகள் இருந்தால், அவற்றை மறைக்க பிங்க் அல்லது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டுக் கொண்டால், உதட்டில் உள்ள கருமைகளை மறைத்துவிடலாம்.
  • முகத்தில் ஆங்காங்கு தோலுரிந்து காணப்படுவதைத் தவிர்க்க, கண்டிஷனரை முகம் மற்றும் கைகளில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிக்க செல்லுங்கள். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்குவதோடு, சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும் இருக்கும்.
  • முகத்தில் உள்ள பிம்பிளை விரட்ட அவ்விடத்தில் டூத் பேஸ்ட்டை வைத்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதனால் பிம்பிள் உலர்ந்துவிடும்.
  • 3 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயுடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மாய்ஸ்சுரைசிங் க்ரீம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகம் புத்துணர்ச்சியுடனும், வெள்ளையாகவும் காணப்படும்.
  • முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிந்தால், அதனை தடுக்க 3 டேபிள் ஸ்பூன் பப்பளிமாஸ் சாற்றினை முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பிரகாசமாக மின்னும்.
  • கரும்புள்ளிகள் முகத்தில் அதிகம் இருந்தால், அவற்றை நீக்க 1 முட்டையின் வெள்ளைக்கருவுடன் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகமும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்