இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் முடி உதிர்வும் மற்றும் பொடுகு தொல்லை.
இதற்கு இன்று எத்தனையோ ஷாம்புகள், செயற்கை மருந்துகள் பொருட்கள் இருந்தாலும் இயற்கையே முறையே சிறந்தது என்று கூறப்படுகின்றது.
இதற்கு கடல் உப்பு பெரிதும் உதவி புரிகின்றது. இது உச்சந்தலையில் உள்ள கழிவுகளை அகற்றி உச்சந்தலைக்கு இதமளிக்க உதவுகின்றது.
அந்தவகையில் கடல் உப்பை கொண்டு எவ்வாறு முடி உதிர்வு மற்றும் பொடுகை போக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- இரண்டு ஸ்பூன் கடல் உப்பு
- ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
- அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு
- ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
பின்னர் உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும். உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.
ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
மேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது .
இதனால் பொடுகு மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகின்றன.