உடம்பில் அங்காங்கே இருக்கும் அம்மை தழும்பை சரி செய்ய வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
164Shares

கோடைகாலத்தில் பெரும்பாலும் மக்களை பாதிக்கும் நோய்களும் அம்மை நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.

பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும்.

இது ஒரு சிலருக்கு இந்த அம்மை தழும்புகள் பல ஆண்டுகளாக உடம்பில் மாறாத வடுவாக காணப்படும்.

இயற்கை பொருட்களை கொண்டு இந்த அம்மை தழும்புகளை விரைவாக நீக்கலாம். தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

ஒட்ஸ்

ஒட்ஸை மிதமான சூடுள்ள நீரில் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டின் சூடு ஆறியதும் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

பேக்கிங் சோடா

இரண்டு டிஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.

இது பேஸ்டாக ஆகும் வரை நன்றாக கலந்து தழும்புகள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். பின்னர் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரை தழும்புகள் உள்ள இடங்களில் தடவுங்கள்.

அப்படி இல்லை என்றால் நீங்கள் முகம் கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் இதை கலந்து உபயோகப்படுத்துங்கள்.

தேன் மற்றும் ஓட்ஸ்

தேன் மற்றும் ஓட்ஸ் கலந்த கலவையை அம்மை தழும்புகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும்.

பின்னர் தழும்புகள் உள்ள இடங்களில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். இதனை அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி

பப்பாளியுடன் கரும்பு சக்கரை மற்றும் பாலை நன்றாக கலக்க வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி பின்னர் சிறிது நேரம் கழித்து மிதமான சோப்பு போட்டு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

கற்றாழை

கற்றாளையின் ஜெல்லை நன்றாக முகத்தில் அப்ளை செய்து அதனை மசாஜ் செய்து அது காயும் வரை விட்டு விட வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும்.

இந்த முறையை தினமும் மூன்று அல்லது இரண்டு முறைகள் தினமும் செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் சாற்றை பஞ்சில் நனைத்து முகத்தில் தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும்.

பின்னர் இதனை 15 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்