தோல் வறட்சியால் அவதிப்படுறீங்களா? இதோ எளிய குறிப்புக்கள்

Report Print Kavitha in அழகு

சரும வறட்சி என்பது யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். அதில் குறிப்பாக பெண்களே பெரிதும் பாதிப்புக்குள்ளாகுகின்றனர்.

இது பெரும்பாலும் குளிர் காலத்தில் தான் ஏற்படும். அதுவும் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது ஏற்படுகின்றது.

இதனை கவனிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் எரிச்சல் ஏற்படுவதோடு மட்டுமல்லாது உங்கள் சருமம் அசிங்கமாகவும் காட்சியளிக்கும்.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளில் பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் காயவிட்டு, பின் கழுவி வர தழும்புகள் மறையும்.
  • பன்னீரும் தேன் கலந்து முகத்திற்கும், சருமத்திற்கும் அப்ளை செய்து ஃபேஸ்பேக் போடலாம். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவினால் வறட்சி நீங்கி முகம் ஜொலிக்கும்.
  • உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் வெண்ணெணை தடவலாம். ஆவகேடோ பழமும் ஆலிவ் ஆயிலும் சருமத்தை நன்கு பராமரிக்க உதவும்.
  • காலை நேரத்தில் முகத்திலும் சருமத்திலும் கற்றாழையை தடவி பின்னர் சில நிமிடங்கள் கழித்து குளிக்க வறட்சி நீங்கும்.
  • நன்கு கனிந்த பப்பாளி பழத்தை கூழ் போல அரைத்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்து உலர வைத்து பின்னர் குளிக்க சருமம் பொலிவடையும்.
  • எலுமிச்சை ஜூஸ் ஒரு டீ ஸ்பூன், பால் பவுடர் ஒரு டீ ஸ்பூன், பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும். சருமத்தை சாஃப்ட் ஆக்கும்.
  • வறட்சியாக உள்ள முகம், கழுத்து கைகளில் தடவி பேக் போட்டு குளிக்க சருமம் மென்மையடையும்.
  • வறட்சியான கருமையான சருமம் கொண்டவர்கள், கேரட், பால் கலந்து அரைத்து முகம், சருமத்தில் அப்ளை செய்ய முகமும், சருமமும் பளபளப்பாகும். வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களை பாதுகாக்கும்.
  • தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...