உதடுகளில் ஏற்படும் கருமையை எப்படி போக்குவது? இதோ அற்புதமான டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

முகத்திற்கு அழகை கொடுப்பதில் உதடுகளுக்கும் ஓர் முக்கிய பங்கு உண்டு.

சருமத்தை விட உதடுகள் எளிதில் கருப்பாகிவிடும். ஏனெனில் உதடுகள் மென்மையாக இருப்பதே காரணமாகும்.

லிப்ஸ்டிக் போட்டு நமது உதட்டின் கருமை மறைத்தாலும், லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிட்ட எளிய முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அதனை பார்ப்போம்.

  • வாரம் இருமுறை சர்க்கரை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் 1 தேனை கலந்து உதட்டை தேயுங்கள். இதனால் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு சொரசொரப்பு போய், மிருதுவாகும்.
  • எலுமிச்சை சாறில் ஒரு பஞ்சை நனைத்து உதட்டில் தினமும் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். ஒரே வாரத்தில் கருமை மறைந்து பளிச்சிடும்.
  • ரோஜா இதழை பேஸ்ட் போல் மசித்து அதனுடன் தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது வறண்ட உதட்டிற்கு நல்ல பலனைத் தரும்.
  • மாதுளையை அரைத்து அதனை உதட்டிற்கு பூசி வரலாம். அல்லது மாதுளை சாறினை இரவு தூங்கும் முன் பூசி வாருங்கள். தினமும் பூசி வந்தால் மாதுளையின் நிறத்திற்கு உங்கள் உதடுகள் மாறும்.
  • குங்குமப் பூவை பொடி செய்து அதனை ஒரு துளி நீரில் ஊற விடுங்கள். ஊறியபின் அந்த நீரை எடுத்து உதட்டில் பூசுங்கள். லிப்ஸ்டிக் தோற்று போகும் .தினமும் பூசி வாருங்கள் உதடுகள் சிவப்பேறிவிடும்.
  • தினமும் இரு வேளை பீட்ரூட் சாறை எடுத்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் சிவந்து, மென்மையாக மாறும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உதட்டில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்கின்றன.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்