தலை முடியை எளிதில் சீராக்கனுமா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்களுக்கு தலைமுடியை அழகுப்படுத்துவதும் சீராக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

முடி என்பது அடித்தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயரியப் பொருளாகும்.

சந்தையில் கிடைக்கும் முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அதற்கு நாம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே சரி செய்ய முடியும். தற்போது முடியை எப்படி சீராக வைத்து கொள்ள வேண்டும் என பார்ப்போம்.

  • ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்துத்தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும்.
  • சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும், இந்த கரைசலை தலைமுடியில் நன்கு தடவி 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.
  • முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டு வதை தடுக்கும்.
  • தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.
  • முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.
  • 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலு மிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று நன்கு ஆரோக்கியமாக வளரும்.
  • ஒரு கப் தேங்காய் எண்ணெயைசூடேற்றி, காய வைத்த நெல்லிக் கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால் முடி கொட்டு தலின் அளவு கண்டிப்பாக குறையும்.
  • நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.
  • தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.
  • பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து - 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள்.
  • தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.
  • சுத்தமான தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers