உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக எல்லா பெண்களுக்குமே தலைமுடி அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் சில சமயங்களுக்கு முடிக்கு போதியளவு ஊட்டச்சத்துகள் கிடைக்காததால் முடி வழுவிழந்து பளபளப்பு போய்விடும்.

முடியை பளபளப்பாக வைக்கவோ அல்லது வலுவாக மாற்ற எந்த விதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பராமரிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதனை எளிதிலே சரி செய்ய முடியும். தற்போது சிலவற்றை பார்ப்போம்.

  • முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டியளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் நன்றாக வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால் உங்கள் முடி வலுவானதாக மாறும்.
  • ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ஆப்பிள் ஜூஸ் ஆகியவற்றைக் கலந்து ஒரு முறை உங்கள் தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அலசுங்கள்.
  • மூன்று தேக்கரண்டி ஆளி விதைகளை எடுத்து ஐந்து நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் இந்த தண்ணீரை நேரடியாக உச்சந்தலையில் ஒரு காட்டன் எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.
  • தேக்கரண்டியளவு நெல்லிக்காய் ஜூஸ் 2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் சூடுபடுத்தி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய் கொண்டு உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து அடுத்த நாள் காலையில் தலை அலசுங்கள்.
  • அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர்களில் படுமாறு தேயுங்கள். அரைமணி நேரம் அப்படியே உலர விட்டு பின்னர் அலசுங்கள். இது உங்களுக்கு வலுவான முடி வளருவதற்கு உதவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers