வசீகர அழகை பெற வேண்டுமா? அப்போ விட்டமின் ஈ கேப்ஸ்யூலை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

விட்டமின் ஈ ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை ஆகும். இது சரும அழகில் பெறும் பங்கு வகிக்கின்றது.

இது கடைகளில் ஆயில், கேப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.

பல க்ரீம்களை வாங்கி பணத்தை விரயம் செய்வதை விட இந்த கேப்ஸ்யூலை கொண்டு சரும அழகினை பெற முடியும்.

தற்போது விட்டமின் ஈ யை வைத்து எப்படி அழகுணர்ச்சியை திரும்ப பெற முடியும் என்பதை பார்ப்போம்.

  • விட்டமின் ஈ கேப்ஸ்யூலை பிரித்து அதிலிருந்து என்ணெயை எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். கரும்புள்ளிகள் காணாமல் போய் விடும்.
  • விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு மறு நாள் காலை முகத்தை கழுவலாம். இப்படி செய்வதனால் முகத்தில் இருக்கும் சின்ன சுருக்கங்களும் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறலாம்.
  • விட்டமின் ஈ எண்ணெயை கண்களுக்கு அடியில் தடவி அரை மணி நேரம் விடவும் அல்லது இரவில் தடவி மறு நாள் கழுவவும். கருவளையம், கண்களில் உண்டாகும் தோய்வு, சுருக்கம் எல்லாம் மறைந்துவிடும்.
  • வறண்ட சருமத்தில் எளிதில் சுருக்கங்கள் வந்து சருமமும் தொய்வடைந்து விடும். விட்டமின் ஈ எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் தினமும் செய்தால் வறண்ட சருமமும் பளிச்சிடும்.
  • முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கம் என இல்லாத இளமையான பொலிவான முகத்தை பெற வாரம் ஒருமுறை விட்டமின் ஈ எண்ணையால் முகத்தில் மசாஜ் செய்யுங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்