உட்காரும் இடத்தில் பருவா? அதனை எப்படி சரி செய்வது?

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு முகத்தில் வரும் பருக்களை போன்று புட்டத்திலும் பருக்கள் வருவது வழமை ஆகும்.

இதற்கு முக்கிய காரணம் சுத்தமின்மையும் ஆகும்.

குறிப்பாக இது வியர்வை அதிகம் வந்தால், அல்லது காற்று பூகாத உள்ளாடை அணிந்தாலும் புட்டத்தில் பருக்களை வந்துவிடுகின்றது.

இதனை எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டும் சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • சோடா உப்பினை நீருடன் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். அதனை பருக்கள் உள்ள இடத்தில் தடவி , 10-15 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு வெது வெதுப்பான நீரினில் கழுவவும். இதுபோல் தினமும் செய்துவந்தால், பருக்கள் இருந்த இடம் மாயமாகும்.
  • தினமும் இரு வேளை அதனை தடவி வந்தால் , நல்ல பலன் கிடைக்கும். லாக்டிக் அமிலம் கொண்ட லோஷன்கள் இறந்த செல்களை வேகமாக அகற்றிவிடும்.
  • எலுமிச்சை சாறை தேய்ப்பதனால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் எலுமிச்சையில் விட்டமின் சி உள்ளது. அது மேலும் பருக்கள் வராமல் தடுக்கும். அதுமட்டுமிலாமல், பருக்களினால் வரும் தழும்புகளையும் அகற்றும்.
  • பூண்டுச் சாற்றை நீருடன் கலந்து உபயோகிக்கவும்.இது பருக்களை மேலும் பெருகச் செய்யாமல் தடுக்கும் ஆற்றலுடையது.
  • தினமும் தேன் பூசி வந்தால் பருக்களை எளிதாய் விரட்டி விடலாம்.
  • மஞ்சள் பொடியை நீருடன் சேர்த்து, பேஸ்ட் போலச் செய்து , பருக்கள் உள்ள இடத்தில் தடவி காய்ந்தபின் கழுவி விடுங்கள். தினமும் செய்து வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்