முகப்பருவால் வந்த தழும்புகளை நீக்கனுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பருக்கள் இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படுவது சகஜமாகும்.

இதனை நகங்களை வைத்து கிள்ளவே, உடைக்கவே கூடாது. ஏனெனில் இது பின்னடைவில் தழுப்பாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றது.

முகப்பருவால் உண்டன தழும்பை போக்க கண்ட கண்ட கிறீம்களை போடுவதை தவிர்த்து இயற்கை பொருட்களின் மூலம் சரி செய்ய முடியும். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

  • சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
  • ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
  • கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காண்பீர்கள்.
  • போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத்தழும்புகளும் மறைந்து காணப்படும்.
  • தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்