முகம் இயற்கை முறையில் சிவப்பாக மாற வேண்டுமா? இந்த மூலிகை பேக்கை யூஸ் பண்ணுங்க!

Report Print Kavitha in அழகு

பொதுவாக நமது பழங்காலத்தில் இருந்த பெண்கள் தங்களது முக அழகினை தக்க வைத்து கொள்ள பல வகையான மூலிகை பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் இன்று பல பெண்கள் தங்கள் முக அழகினை பராமரிக்க பல்வேறு இராசயனங்கள் மூலம் செய்யப்பட்ட கண்ட கண்ட கிறீம்களை போட்டு வருகின்றனர்.

ஆனால் இது பின்னடைவில் பெரிய பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

எந்த பக்க விளைவுகளும் இன்றி இயற்கை பொருட்களை கொண்டு நமது சிகப்பழகினை எளிதில் பெற முடியும்.

இதற்கு நம் வீட்டிலேயே இயற்கையான முறையில் முகத்தினை வெள்ளையாக்க முடியும்.

அந்தவகையில் இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக மாற மூலிகை பவுடர் ஒன்றினை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போர்.

தேவையான பொருட்கள்
  • பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
  • ஓட்ஸ் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கஸ்துரி மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கிரீன் டீ ஃபைன் பவுடர் - 3 டீஸ்பூன்
செய்முறை :

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய பவுலில் கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த பின், கண்ணாடி ஜாரில் இந்த கலவையை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு தேவைப்படும் பொழுது அவற்றை எடுத்து ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தேய்த்து, 1 நிமிடம் மசாஜ் செய்து கழுவலாம்.

இதையே ஃபேஸ் பேக்காகவும் போட்டு கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் 4 முறை பயன்படுத்தினாலே ரிசல்ட் தெரியும்.

இந்த மூலிகை பேக் போட்டால் சருமம் பிரகாஷமாக மாறும், சருமம் முழுவதும் சீரான நிறம் கிடைக்கும், சருமம் பொலிவுடன் காணப்படும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்