சருமத்தின் அழகை பாதுகாக்கணுமா? பெட்ரோலியம் ஜெல்லியை இப்படி பயன்படுத்துங்க

Report Print Kavitha in அழகு

பெட்ரோலியம் ஜெல்லி அழகைப் பராமரிப்பதற்கு பயன்படும் பொருட்களில் ஒன்றாகும்.

பெட்ரோலியம் ஜெல்லி உச்சி முதல் பாதம் வரையும் அனைத்து அழகு பராமரிப்பிலும் பயன்படுகிறது.

எல்லா வீடுகளிலும் பெட்ரோலியம் ஜெல்லி தடிப்புகள், சிறிய வெட்டுக்காயங்கள், பாத வெடிப்புகள், உதடு வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

ஆனால் இவற்றை தவிர பெட்ரோலியம் ஜெல்லி வேறு பல பயன்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.

 • சிறிது பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் எடுத்து மேக் அப்பை சுலபமாக எடுத்துவிடலாம்.
 • சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் கை கால் முட்டிகளில், கைகளில், கால்களில் தடவிக்கொள்ளுங்கள். அதன் மீது உங்களுக்கு பிடித்தமான வாசனை திரவியத்தை பூசுங்கள். நாள் முழுவதும் மணமாக இருக்கும்.
 • புருவங்கள் சரியான வடிவத்தில் வர சிறிது பெட்ரோலியம் ஜெல்லி எடுத்து தடவி அழகான வடிவத்திற்கு கொண்டு வாருங்கள்.
 • நெற்றியில் ஹேர் டை ஒழுகி விட்டால் அதிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை உங்கள் நெற்றியில் தடவிகொள்ளுங்கள். இனி கறை படாது.
 • தடிமனான முடி இருப்பவர்கள் பிடித்த ஹேர் ஸ்டைல் போடும் போது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவி, உங்களுக்கு பிடித்தமான ஹேர் ஸ்டைலை போட்டுக்கொள்ளுங்கள்.
 • பழைய லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி, அதன் மீது சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவுங்கள். உதடுகள் பளபளப்பாக இருக்கும்.
 • சிறிது சமையல் சோடா மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து, முகத்தில் தடவ, சருமத்தில் உள்ள வறட்சியை போக்கி, ஈரப்பதத்தை வழங்கி, சருமத்தை மென்மையாக்குகிறது.
 • சக்கரை மற்றும் பெட்ரோலியம் ஜெல்லி சேர்த்து சருமத்தில் தடவ, அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது.
 • சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இரவு கிரீமாக தடவிக்கொள்ளுங்கள். காலையில் முகம் பளபளப்பாக இருக்கும்.
 • சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் படுக்க செல்வதற்கு முன் பூசுங்கள். இதனால் உங்கள் இமை முடிகள் ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் இருக்கும்.
 • Manicure செய்த பிறகு நகத்தின் நுனிகளில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் இன்னும் மென்மையாக இருக்கும்.
 • நெயில் பாலிஷ் போடும் போது அது கை விரல்களில் பட்டுவிட்டால் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை கை விரல்களில் சுற்றித்தடவி பின்பு நெயில் பாலிஷ் இடுங்கள். இப்போது நெயில் பாலிஷ் விரல்களில் படியாது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்