பளீச் என்ற முகத்தை பெற வேண்டுமா? தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

தக்காளி சமையலுக்கு மட்டுமின்றி முக அழகிற்கும் பெரிதும் பயன்படுகின்றது.

இந்த தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்னைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

முகப்பரு பிரச்னைக்கு தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும், இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம்.

அந்தவகையில் தக்காளியை கொண்டு முக அழகினை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.

  • பழுத்த தக்காளியை பசைப்போல அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
  • தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
  • ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பொலிவு பெறும்.
  • தக்காளிப்பழத்தை அரைத்து அந்த கலவையுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கருமை அடைந்த இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்தால் சன் டேன் மறைந்திடும்.
  • தக்காளிச்சாறு இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறு ஒரு டீஸ்ப்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்ததும் கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி பளிச் சென்று தெரியும்.
  • வறண்டிடாமல், ஆரோக்கியமான சருமமாக தெரிய தக்காளிச் சாறுடன் இரண்டு டீ ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர நல்ல பலன் கிடைக்கும்

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்