இரண்டே நாட்களில் வெள்ளையாகணுமா ? இதோ சில சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
470Shares

பொதுவாக எல்லா பெண்களுக்குமே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

இதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு. இருப்பினும் இது நாளாடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அதுவே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பைக் கொடுத்தால், எவ்வித பக்க விளைவும் இருக்காது.

அந்தவகையில் இயற்கை முறையில் முகத்தினை எப்படி அழகுப்படுத்துவது என்பதை பார்ப்போம்.

  • தினமும தேனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தேனுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு அல்லது அதிமதுரப் பொடி சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். இந்த வழியானது வறட்சியான சருமத்தைக் கொண்டவர்களுக்கு ஏற்றது.
  • ஒரு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மட்டுமின்றி, கை, கால்களுக்கும் தடவி, சர்க்கரை கரையும் வரை மென்மையாக தேய்த்து அதன் பின் நீரால் சருமத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் துணியால் துடைத்துவிட்டு, இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.
  • வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரால் கைகளை நனைத்து சருமத்தை தேய்க்க வேண்டும். இப்படி சிறிது நேரம் தேய்த்து மசாஜ் செய்வதால், சருமத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.
  • கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, 15-30 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். வேண்டுமானால் கற்றாழை ஜெல்லுடன் வேர்க்கடலைப் பொடியை சேர்த்து கலந்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், இரண்டு நாட்களில் சருமம் வெள்ளையாகி இருப்பதைக் காணலாம்.
  • சூரியகாந்தி விதைகளை இரவு தூங்கும் முன் காய்ச்சாத பாலில் போட்டு ஊற வைத்து பின் மறுநாள் காலையில் அதை அரைத்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம்.
  • ரோஸ் வாட்டரில் பச்சை பால் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி ஒரு இரண்டு நாள் செய்தால், சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதை நன்கு காணலாம்.
  • மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்