கரும்புள்ளிகளை போக்கி சருமத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? அப்போ இந்த பூவை யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா.

இது முகத்தின் அழகிற்கு பெரிதும் உதவி புரிகின்றது. குறிப்பாக இது கரும்புள்ளிகளை போக்குகின்றது.

கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும். இந்த கரும்புள்ளிகளை எளிதில் பன்னீர் ரோஜா கொண்டு அகற்றி விடலாம்.

அந்தவகையில் தற்போது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க பன்னீர் ரோஜாவை எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

google
  • பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.
  • ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.
  • ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
  • ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் குழைத்து இதை முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்