மெத்தென்ற பாதங்கள் வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சில பெண்களுக்கு முகம் பார்க்க நல்ல வெள்ளையாக காணப்படும். ஆனால் பாதங்கள் பார்க்க கருமையடைந்து காணப்படுவதுண்டு.

அதுமட்டுமின்றி உங்கள் பாதங்களில் சீக்கிரம் வறட்சி ஏற்பட்டுவிடும். அங்கு மிக மென்மையான சருமம் இருப்பதால், வறட்சி ஏற்பட்டால் எளிதில் சுருங்கி வயதான தோற்றத்தை பாதங்களுக்கு தந்துவிடும்.

இதற்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பியூட்டி பாலர்களுக்கு சென்று பெடிக்யூர் செய்வது தான் வழக்கம்.

இதனை இயற்கை பொருட்களை கொண்டு வீட்டில் இருந்தப்படியே பாதங்களை அழகுப்படுத்த முடியும்.

அந்தவகையில் மென்மையான பாதங்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

தேவையானவை
  • சோப் நிறைந்த நீர் - கால்கள் நனையும் அளவிற்கு
  • மார்பிள் கற்கள்- கை நிறைய
  • ரோஜா இதழ்கள் - கை நிறைய
  • பால் - அரை லிட்டர்
  • வேப்பிலை - கை நிறைய
  • கோதுமை முளை எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • சந்தன எண்ணெய் - 5 துளிகள்
செய்முறை

முதலில் ஒரு டப்பில் வெதுவெதுப்பாய் சூடான நீர் எடுத்து கொள்ளவும்.

அதில் மேலே சொன்னவற்றை கலக்குங்கள். பின்னர் அதில் பாதங்களை 20 நிமிடங்கள் அமிழ்த்துங்கள்.

அதன்பின் ப்யூமிக் கல்லை கொண்டு பாதங்களை சுத்தப்படுத்துங்கள். உங்கள் கால்கள் மிருதுவாய் பட்டுப் போல மாறும்.

hindirush

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்