காலில் உள்ள நகங்களை எப்படி சுத்தம் செய்வது?

Report Print Kavitha in அழகு

நகங்கள் `கெரட்டின்' என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது.

இந்த நகத்தின் வளர்ச்சி மற்றும் தோற்றம் உங்கள் உடல் நலத்தின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.

அந்தவகையில் நகங்களை ஆரோக்கியத்துடன் சுத்தமாகவும் வைத்து கொள்ளுவது அவசியமாகும்.

தற்போது நகங்களை எப்படி சுத்தமாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

Google

  • கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

  • நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து, கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன.

  • குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்து விடக் கூடாது. மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

  • நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்