பெண்களுக்கு கழுத்தில் ஏன் உண்டாகிறது? அதனை எப்படி போக்குவது?

Report Print Kavitha in அழகு

வெயிலில் அதிக நேரம் அலைவதாலும், செயின் போன்றவற்றை அணிவதாலும் கழுத்து கருமையாகிவிடுகிறது எனப்படுகின்றது.

என்ன தான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும் கழுத்தில் உள்ள கருமை நீங்காமல் இருக்கும்.

அதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கழுத்தில் கருமை ஏற்படுகின்றது என சொல்லப்படுகின்றது.

அப்படி அதிக பணத்தை க்ரீம்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக, சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டு கழுத்தைப் பராமரித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது கழுத்து கருமையை எப்படி போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

Google
  • பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.
  • கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு – இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.
  • முட்டைக்கோசை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.
  • பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.
  • சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருந்தால் சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்