சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சக்கரை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

வேதி பொருட்கள் நிறைந்த கிறீம்களும், பவுர்கள் தான் உங்களின் முகத்தை முழுவதுமாக சேதம் செய்கின்றன.

இதனால் முக அழகு பாழகியும் விடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் அவை பொலிவான தோற்றத்தை தராது.

முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும்.

இதற்காக கண்ட கண்ட கிறீம்களை தான் உபயோகிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை போக்க சக்கரை பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் சக்கரையை வைத்து எப்படி இறந்த செல்களை நீக்கலாம் என இங்கு பார்ப்போம்.

Reuters
தேவையானவை
  • சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் - 2 சொட்டு
  • எலுமிச்சை சாறு - 2 சொட்டு
செய்முறை

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும்.

ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்