உங்கள் நகம் உடையாமல் நீண்டு வளரணுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்களுக்கு நகங்கள் நீளமாக இருக்க வேண்டும் ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் அடிக்கடி நகங்கள் உடைந்து போவதுண்டு.

அதுமட்டுமின்றி சிலருக்கு ஏதாவது சின்ன வேலை செய்தாலே நகங்கள் உடைந்து போய்விடும்படி இருக்கும். ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை .

அந்தவகையில் நகம் உடையமால் நீண்டு வளர சில எளிய டிப்ஸ்களை பற்றி பார்ப்போம்.

தேவையானவை :
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – அரை டீஸ்பூன்
  • லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை
  • எண்ணெய் – சில துளிகள்
செய்முறை

பாதம் எண்ணெயை சூடுபடுத்தி, அதில் எலுமிச்சை சாறை விடவும். பின் வாசனை எண்ணெயை கலந்து ஒரு பஞ்சினால் நகத்தில் தேய்க்கவும். வாரம் 3 நாட்கள் இப்படி செய்யுங்கள். நகங்கள் உடையாது. பலம் பெறும். வேகமாகவும் வளரும்.

உங்கள் நகங்கள் ஆரோக்கியத்தின் குறியீடு. நகத்தின் ஓரங்களில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் கூட அது ரத்த நாளங்களை எளிதில் சென்றடையும்.

இயற்கையான மருதாணியை அரைத்து போடுவதால் நகங்களில் உண்டாகும் பாதிப்புகள் மறைந்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்