முகப்பருவை எளிதில் விரட்ட வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பெண்களும் ஆண்களும் இன்றைய கால கட்டத்தில் சந்திக்கும் பிரச்னைகளில் முகப்பரு பிரச்னை முக்கிய இடம் பெறுகின்றது.

முகப்பரு வந்தால் போதும் அதனை கைகள் வைத்து கிள்ளுவது, பருக்களை உடைப்பது போன்றவற்றை செய்வது வழக்கம்.

இது முற்றிலும் தவறு, ஏனெனில் இப்படி பருக்களை உடைப்பதனால் அந்த இடத்தில் வடுவை ஏற்படுத்தி விடுகின்றது. இது முக அழகினையை பாழாக்கி விடுகின்றது.

இதிலிருந்து விடுபட கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்து இயற்கை பொருட்களை கொண்டு எப்படி எளிதில் முகப்பருவை விரட்டலாம் என பார்ப்போம்.

Shutterstock
  • ஒரு நாளைக்கு 2-3 முறை மிதமான ஃபேஸ் வாஷ் (Face wash) கொண்டு முகத்தைக் கழுவலாம்.
  • வாரம் 3-4 முறையாவது மிதமான ஷாம்பு போட்டு தலைமுடியை சுத்தப்படுத்த வேண்டும்.
  • முகத்துக்கு மட்டும் தனியாக துண்டு அல்லது டிஷ்ஷூ பயன்படுத்தி முகத்தை துடைக்கவும். தலை துவட்டும் துண்டிலே முகத்தைத் துடைக்கக் கூடாது.
  • ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வைத்து குழைத்து, முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால் பரு நீங்கும். இனி பருவோ ஆக்னியோ வராது.
  • துளசி இலை பவுடர் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு சிட்டிகை, முல்தானிமட்டி ஒரு தேக்கரண்டி நன்றாக கலந்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேக்காக போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
  • வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விட வேண்டும். தொடர்ந்து செய்து வர, முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.
  • பட்டைத் தூளை தேன் கலந்து குழைத்து பரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவலாம். 2 மாதம் தொடர்ந்து செய்து வர பரு நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்