சரும புத்துணர்வு பெற வேண்டுமா? வால்நாட் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு
170Shares

பாதாம், பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன.

வால்நட் பருப்பின் தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள்(Antioxidant) அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால்(Polyphenal) என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

வால்நட்ஸில் உடலுக்கு தேவையான அளவு புரோட்டீன் மற்றும் கார்போஹைட்டேட்டுகளை கொண்டுள்ளன.

இது மருத்துவ பயன்பாட்டில் மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பயன்படுகின்றது.

அந்தவகையில் இந்த எண்ணெய்யை நமது சருமத்திற்கு பயன்படுத்தினால் அற்புத பலன்களை பெறமுடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

Google
  • வால் நட்ஸ்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து கவுவினால் சருமத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் முற்றிலுமாக மறைந்து இளமையான தோற்றத்தை பெறமுடியும்.
  • சருமத்தில் ஏதேனும் பகுதிகளில் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டால் அந்த பகுதிகளில் வால்நட்ஸ் எண்ணெய்யை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சியை சரிசெய்ய குளிக்கும் நீரில் வால்நட்ஸ் எண்ணெய்யை சிறிதளவு சேர்த்து குளிக்க பயன்படுத்தினாலே போதும் சரும பிரச்னைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
  • வால்நட்ஸ் எண்ணெய்யில் ஒமேகா-3 அதிகமாக உள்ளது. இதனால் இதயநோய், புற்றுநோய், சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்