உங்க கழுத்து கருப்பா இருக்கா? இதனை போக்க வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் மட்டும் போதுமே!

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு முகம் பார்க்க நல்ல வெள்ளையாக இருக்கும். ஆனால் கழுத்துப்பகுதி பார்க்க கருமையடைந்து காணப்படும்.

ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவதனாலும் கழுத்து கருமையடைந்து காணப்படுவதுண்டு.

அந்தவகையில் இதற்கு போக்க கிறீம்கள் பாவிப்பதை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடிம். தற்போது அவற்றை பார்ப்போம்.

Google
  • சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்தம் மாவு கலந்து கருப்பாக உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருப்பு சிறிது சிறிதாக மறைவதை பார்க்க முடியும்.
  • தயிரை கையில் எடுத்து கழுத்து பகுதியில் மெதுவாக தேய்த்து ஊறவைக்கவும். பின்னர் 5 நிமிடம் கழித்து சுடுதண்ணீரில் கழுத்து பகுதியை அழுத்தி துடைக்கவும். இவ்வாறு செய்வதாலும் கழுத்தில் இருக்கும் கருப்பு மறையும்.
  • வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
  • கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு கலந்து பால் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனை மைபோல் குழைத்து கருப்பாக உள்ள இடத்தில் தேய்த்து பின்னர் கழுவினாலும் இந்த கருமை நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...