15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பை போக்கும் கருப்பு உப்பு : எப்படி தெரியுமா?

Report Print Kavitha in அழகு

குளிர் காலத்தில் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுவது கால் பாதங்கள் மட்டுமே. இதனால் அடிக்கடி பாத வெடிப்பு ஏற்பட்டு விடுகின்றது.

பாதங்களில் உள்ள வெடிப்புகள் அழகைக் கெடுப்பதுடன் வலியையும் உண்டாக்கும்.

இத்தகைய வலியைப் போக்கவும், வெடிப்பைப் போக்கவும் கருப்பு உப்பு சிறந்த தீர்வைத் தருகிறது.

அந்தவகையில் கருப்பு உப்பை வைத்து எப்படி பாதவெடிப்பை போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • கருப்பு உப்பு
  • நீர்
செய்முறை

ஒரு பக்கெட்டில் பாதி அளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ளவும். அதில் சிறிதளவு கருப்பு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பக்கெட் நீரில் உங்கள் பாதங்களை வைக்கவும்.

15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். தொடர்ந்து இப்படி செய்து வருவதால் பாத வெடிப்பின் காரணமாக உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்பு நிவாரணம் பெறுவதை உங்களால் உணர முடியும்.

மேலும் கருப்பு உப்பு உங்கள் பாதங்களைச் சுற்றியுள்ள இறந்த அணுக்களைப் போக்கி பாதங்களை மென்மையாக்கும்.

Google

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்