கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை எப்படி போக்குவது?

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் அதிகமாக ஸ்ட்ரெட்ச் மார்க்குகளுடன் காணப்படுவதுண்டு. இது அவர்களின் சரும அழகை பெரிதும் பாதிக்கின்றது.

ஸ்ட்ரெட்ச் மார்க் பிரசவமான பெண்களுக்கு மட்டுமல்ல உடல் எடை அதிகமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் கூட ஏற்படுகிறது.

குறிப்பாக திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு காரணமாக சரும நீட்சித் தன்மையால் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் உருவாகிறது.

இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு அடிக்கடி செல்லமால் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்யலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

medicalnewstoday
  • கற்றாழை இலையில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் இந்த ஜெல்லை தடவுங்கள். அதை அப்படியே 20-30 நிமிடங்கள் உலர விடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவுங்கள்.
  • இரவில் தூங்குவதற்கு முன்பு இந்த கோக்கோ பட்டரை உங்கள் வயிற்றில் தடவிக் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இப்படியே செய்து வந்தால் சில வாரங்களில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைவதை நீங்கள் காண முடியும்.
  • சம அளவு வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வாருங்கள். 10 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவு எடுத்து கலந்து ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவுங்கள். மசாஜ் செய்யுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • 2-3 ஆப்ரிகாட் பழங்களை எடுத்து விதைகளை நீக்கி விட்டு அதை பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இப்பொழுது இந்த பேஸ்ட்டை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். இப்படி செய்து வந்தால் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்து விடும்.
  • விளக்கெண்ணெய்யை வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் சில வாரங்களில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.
  • 1 லெமன் ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மீல், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட், போதிய அளவு பால்கலந்து இதை உங்கள் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் உள்ள பகுதிகளில் தடவி உலர விடுங்கள். லேசாக ஸ்க்ரப் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வாருங்கள்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்