கூந்தல் வளர்ச்சிக்கு இனி இந்த ஆர்கானிக் ஷாம்பூவை பயன்படுத்துங்க!

Report Print Kavitha in அழகு

இன்றைய காலத்து பெண்கள் அதிகம் தலைமுடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்பூ கலவைகளை தான் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதனால் கூந்தல் வளர்ச்சி தடைப்பட்டு முடி உதிர்வு ஏற்பட காரணமாக அமைகின்றது.

அந்தவகையில் கெமிக்கல் இல்லாத வீட்டில் செய்யக்கூடிய ஆர்கானிக் ஷாம்பூவை எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • புங்க கொட்டை அல்லது பூந்திக் கொட்டை - 10
  • சிகைக்காய் - 1 கப்
  • நெல்லிமுள்ளி - 1 கப்
  • வெந்தயம் - 1 கப்
  • செம்பருத்தி பூக்கள் - 3

செய்முறை

முதலில் புங்ககொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள்.

அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள்.

கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள். அதனுடன் சிகைக்காய்கள் 6 எடுத்து சேர்த்திடுங்கள்.

இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இவைகளை மாற்றுங்கள். அதனை அடுப்பில் வையுங்கள். இவைகளோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களாக அதனுடன் சேருங்கள்.

அடுப்பை பற்ற வைத்து இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சுங்கள்.

ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். மேலும் இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

hairbuddha

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்