உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதனை மறைக்க இதோ சில டிப்ஸ்

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலரது முகத்தில் குழிகள் அதிகம் காணப்படும். இது முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடுகின்றது.

குறிப்பாக முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதோ, அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.

இதனை தடுக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சரி செய்ய முடியும்.

தற்போது முகத்தில் உள்ள அசிங்கமான குழிகளை போக்கும் சில எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

  • வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.
  • முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.
  • நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.
  • தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
  • கடலை மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பள்ளங்கள் மெதுவாக மறைவதை நன்கு காணலாம்.
  • சிறிது பாதாமை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
  • தேனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்குவதோடு, முகத்தில் உள்ள குழிகளும் மறையும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்