உங்கள் சருமம் வெயிலால் கருத்து போகுதா? அதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Kavitha in அழகு
269Shares

கோடைகாலம் வந்துவிட்டாலே. வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது அவசியம். கோடை வெயிலால் நம் சருமம் பாதிக்கப்படுவது முக்கியமான விஷயம் ஆகும்.

இதனை போக்க வீட்டில் இருக்கும் சில பொருட்கள் பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது வெயிலால் கருத்து போன சருமத்தை எப்படி பொழிவாக்கலாம் என இங்கு பார்ப்போம்.

  • வெயிலில் சென்று எப்போது திரும்பினாலும் கெட்டியாக இருக்கும் புளித்த தயிரில் சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக குழைத்து முகம், கழுத்து, கை, கால் பகுதி முழுக்க தடவி 30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவி வந்தால் முகத்தில், கை, கால்களில் படர்ந்திருக்கும் கருமை விலகும். சருமமும் மிருதுவாக இருக்கும்.
  • வெயிலால் வந்த கருமை நீங்க வெளியிலிருந்து வந்ததும் தக்காளியை கூழ் போல் மசித்து சர்க்கரை கலந்து ஸ்க்ரப் போல் செய்தால் முகத்தின் கருமை நீங்கும்.
  • சற்று வறட்சி அதிகமாக இருப்பவர்கள் தக்காளியுடன் இலேசாக ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயில் கலந்து தடவலாம். கூடவே சந்தனத்தை குழைத்தும் கூட சேர்க்கலாம். ஒரு நாள் ஒரு முறையில் இந்த மாற்றத்தை உணர்வீர்கள்.
  • தினமும் குளிப்பதற்கு முன்பு பாசிப்பயறு மாவு கற்றாழை கலந்து உடலுக்கு தேய்த்து குளித்துவந்தாலே கோடையிலும் சருமத்தை அழகாய் வைத்திருக்கலாம்.
  • வெள்ளரிக்காயை நீர் விடாமல் அரைத்து சாறாக்கி அதை காட்டன் கொண்டு முகம், கழுத்து கை, கால் பகுதியில் தடவியபடி வந்தால் சருமத்தின் சன் டேன் மாறும். வாரத்துக்கு மூன்று முறை செய்தாலே போதும்.
  • கெட்டித்தயிரை புளிக்க வைத்து அதனுடன் ஆரஞ்சு சாறு சரிசமமாக கலந்து முகம், கழுத்து, கை, கால் பகுதியில் மிருதுவாக தேய்த்து வந்தால் சருமத்தின் வறட்சி போகும்.
  • எலுமிச்சை சாறை காட்டனில் நனைத்து முகத்தில் தடவி இலேசாக ஸ்க்ரப் செய்தால் கூட போதும் ஆனால் வாரத்துக்கு ஒரு முறை இதை செய்யுங்கள்.
  • பப்பாளி பழத்தை கூழாக்கி மசித்து அதனுடன் தேன் கலந்து நன்றாக மசிக்கவும். முகத்தை சுத்தமான நீரில் கழுவி முகம், கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகத்தை கழுவினால் சன் டேன் பிரச்சனை ஓடி விடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்