உச்சி முதல் பாதம் வரை சிவப்பழகு தரும் பீட்ரூட்! எப்படி பயன்படுத்துவது?

Report Print Kavitha in அழகு

பொதுவாக எல்லா பெண்களுக்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசை காணப்படுவதுண்டு.

இதற்காக பலரும் பல வழிகளில் கெமிக்கல் நிறைந்த கிறீம்களையே பாவிப்பதுண்டு.ஆனால் இது பின்னடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

குறிப்பாக பருக்கள், கரும்புள்ளிகள், உதடு கருமை போன்றவற்றை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் இதற்கு பீட்ரூட் பெரிதும் உதவி புரிகின்றது. இது உச்சி முதல் பாதம் அனைத்து சரும பிரச்சினைக்கு தீர்வளிக்கின்றது.

தற்போது பீட்ரூட்டை எப்படி பயன்படுத்தலாம் என இங்கே பார்ப்போம்.

தயாரிக்கும் முறை

  • பீட்ரூட் அரைகிலோ அல்லது ஒரு கிலோ வாங்கி தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

  • பிறகு மெல்லிய துணியில் அதை நிழலில் உலர்த்தி எடுங்கள். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காயவைத்து எடுத்தால் அதன் ஈரம் குறைந்திருக்கும்.

  • நன்றாக ஈரம் குறைந்திருக்க வேண்டும் அப்போதுதான் மிக்ஸியில் அரைக்கும் போது பொடியாக்க முடியும்.

  • சிறிது சிறிதாக மிக்ஸியில் நறுக்கி பொடித்து விடுங்கள். பொடி ஈரமாக இருந்தால் மீண்டும் ஒருநாள் முழுக்க நிழலில் உலர்த்தி காயவிடுங்கள்.

  • பிறகு மீண்டும் மிக்ஸியில் பொடித்து அதை மெல்லிய துணியில் சலித்து வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் அடைத்து வையுங்கள்.

  • வெளியில் வைக்க வேண்டாம். ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து தேவையான போது பயன்படுத்துங்கள்.

  • பீட்ரூட் பவுடரை 6 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். உச்சி முதல் உள்ளங்கால் வரையும் இதை பயன்படுத்தலாம்.

டிப்ஸ்

  • இயற்கை ஹேர் டை தயாரிக்கும் போது ஒரு டீஸ்பூன் பீட்ரூட் பொடியையும் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது வெறும் பீட்ரூட் பவுடரை மட்டுமே ஊறவைத்து இளநரை இருக்கும் பகுதியில் தடவி காயவிட்டு விடலாம்.

  • தலை சீவிய பிறகு பீட்ரூட் பவுடரை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து தலைக்கு ஸ்ப்ரே செய்தாலே போதும். தினமும் செய்துவந்தாலே இளநரை போகும்.

  • தினமும் இரவு நேரங்களில் படுக்கும் முன்பு பீட்ரூட்டை குழைத்து உதட்டுக்கு போட்டு வந்தால் போதும் தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினாலே உதடு லிப்ஸ்டிக் போடாமலே அழகாய் இருக்கும். பீட்ரூட் பவுடருன் குங்குமப்பூ குச்சிகளையும் கலந்து பயன்படுத்தினால் உதடு மேலும் மேலும் சிவக்கும்.

  • முகம் இழந்த சருமத்தின் நிறத்தை மீண்டும் பெறுவதற்கு பீட்ரூட் பவுடரை பாலில் குழைத்து முகத்தில் பேக் போடுங்கள். இதனால் முகம் இயற்கையாக சிவப்பாக மாறும்.

  • முகத்தில் கரும்புள்ளிகள் மறைய பீட்ரூட் பவுடருடன் கற்றாழை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

  • விழாக்களுக்கு செல்லும் போது சந்தனத்தூளுடன் சம அளவு பீட்ரூட் பவுடர் கலந்து பேக் போட்டால் கோல்டன் ஃப்பேஷியல் செய்தது போன்று இருக்கும்.

  • முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி முகச்சோர்வை விரட்டி அடிக்க பீட்ரூட் உடன் தயிர் சம அளவு கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் சருமத்துவாரங்களில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும்.

  • மூக்கின் நுனியில் இருக்கும் கருப்பு அல்லது வெள்ளை நிற கொழுப்பு படலங்களை வெளியே எடுக்க பீட்ரூட் பவுடருடன் ஓட்ஸ் பொடித்து சேர்த்து ஸ்க்ரப் செய்து வந்தால் மூக்கின் நுனி கருப்பு நிறமாக மாறும்.

  • கால்களுக்கு பெடிக்யூர் செய்யும் போது பீட்ரூட்டை கற்றாழை சாறில் குழைத்து பாதங்களின் மீது தடவினால் பாதம் வெடிப்பு நீங்கி கால் பாதங்கள் சிவப்பாய் மிளிரும். முகத்துக்கு பயன்படுத்தும் போது கழுத்துக்கும் சேர்த்து பயன்படுத்துங்கள்.

  • பீட்ரூட்டை குழைத்து தொடை இடுக்கில் இருக்கும் கருமையை நீக்கவும் பயன்படுத்தலாம். அக்குளில் இருக்கும் கருமையை நீக்கவும் பயன்படுத்தலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...