முகத்தில் வரும் சிறு சிறு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா? கத்திரிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு

காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்றாகும்.

நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2,காணப்படுகின்றன.

தாவர ஊட்டச்சத்துகள், வைட்டமின், மினரல் போன்ற சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்துகள் கத்திரிக்காயில் அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு சிறந்த நன்மையைத் தருகிறது

அந்தவகையில் கத்தரிக்காயை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

  • ஒரு கத்திரிக்காயை எடுத்து வட்ட வடிவத்தில் 1/4 இன்ச் அடர்த்திக்கு நறுக்கிவிடவும் நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து திட்டுக்கள் இருக்கும் இடங்களில் சுழல் வடிவத்தில் 3-5 நிமிடங்கள் தடவவும் இந்த கத்திரிக்காய் சாறு உங்கள் முகத்தில் தொடர்ந்து 15 நிமிடங்கள் இருக்கும்படி பார்த்து பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தைக் கழுவவும். குறைந்தபட்சம் ஒரு வாரம் தொடர்ந்து இதனைச் செய்து வந்தால் பழுப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

  • மருக்களை விரட்ட ஒவ்வொரு இரவும், உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு துண்டு கத்திரிக்காயை எடுத்து மருவில் வைத்து அது விழாமல் தடுக்க ஒரு பேன்டேஜ் போட்டு மூடிக் கொள்ளவும். தொடர்ந்து இப்படி செய்து வருவதால் அந்த மரு எளிதாக விழுந்து விடுவதை நம்மால் காண முடியும். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு துண்டு கத்திரிகாயைப் பயன்படுத்தவும்.

  • எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு ஒரு பெரிய துண்டு கத்திரிக்காயை எடுத்து தோல் நீக்காமல் அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதுடன் இரண்டு ஸ்பூன் வாசனையற்ற யோகர்ட் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். இருபது நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

  • வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைக்க அரைத்த கத்திரிக்காய் விழுதை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். நல்ல தீர்வு வரும்வரை இதனைப் பின்பற்றவும்.

  • பிசுபிசுப்புத் தன்மை அதிகம் உள்ள கூந்தலுக்கு கத்திரிக்காயை நறுக்கி உங்கள் உச்சந்தலையில் தடவி, மென்மையாக மசாஜ் செய்வும். பின்பு வழக்கம்போல் தலையை அலசவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்