முகம் இயற்கையாகவே ஜொலிக்க குங்குமப்பூ மட்டுமே போதும்! இப்படி பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு
163Shares

பொதுவாக இன்றைய காலங்களில் நம்மில் சில பெண்கள் சீரற்ற உணவு பழக்கம், தூக்கமின்மை, வாழ்க்கை முறை இவை எல்லாமே உடல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல அழகான தோற்றத்திலும் கூட குறைகளை உண்டாக்கிவிடுகிறது.

இதனை போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இருப்பினும் இது சில சமயங்களில் சருமத்தை வறட்சிக்குள்ளாக்க செய்கின்றது.

இதனை தடுக்க இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வந்தாலே போதும்.

அதில் குங்குமப்பூ பெரிதும் உதவுகின்றது. ஏனெனில் அந்தகாலத்தில் பெண்கள் இதனை தான் முகத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.

குங்குமப்பூவில் நிறம் தரும் குணங்களோடு இயற்கையாக ப்ளீச்சிங் தன்மையும் படர்ந்திருக்கிறது. அதனால் இவை சருமத்தில் இருக்கும் அழுக்கை நீக்கவும் பயன்படுகிறது.

அந்தவகையில் முகத்தை ஜொலிக்க செய்ய குங்குமப்பூவை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை

  • பாதாம் எண்ணெய் - 1 கப்
  • குங்குமப்பூ - 5 டீஸ்பூன் அளவு

செய்முறை

பாதாம் எண்ணெயில் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். நன்றாக 4 மணி நேரம் ஊறியவுடன் சற்று அகலமான பாத்திரத்தில் இதை ஊற்றி வைக்கவும்.

அதைவிட இன்னும் அகலமான பாத்திரத்தில் நீர் விட்டு அதை சூடேற்றவும். நீர் கொதித்ததும் அந்த பாத்திரத்தின் நடுவே இந்த அகலமான பாதாம் எண்ணெய் குங்குமப்பூ கலந்த பாத்திரத்தை வைத்து இலேசாக சூடேற்றவும்.

அடுப்பு மிதமாக எரிய விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து அதை கீழே இறக்கி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும். தேவையெனில் குங்குமப்பூவை வடிகட்டி சேகரிக்கலாம். அல்லது குங்குமப்பூவோடு வைத்தும் பயன்படுத்தலாம்.

தினமும் இரவு தூங்கும் போது இந்த எண்ணெயை முகத்தில் வட்ட வடிவில் கீழிருந்து மேலாக மெதுவாக மசாஜ் செய்து கொள்ளவும்.

காலை வேளையில் முகத்தை கடலை மாவு அல்லது முகத்துக்கு பயன்படுத்து பொடியை கொண்டு கழுவி வந்தால் முகம் பளிச் என்று இருக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்