இன்றைய காலத்தில், இளம்பெண்கள் தங்கள் அழகை பாதுகாக்க காட்டும் அக்கறை அதிகம்.
அதில் கண்களுக்கு கவசமாக விளங்குபவை புருவங்கள். இது நம் முகத்துக்கே அழகு சேர்க்கின்றது.
அதுமட்டுமின்றி நம் கண்களை சூரியன், தூசி, வியர்வை ஆகியவற்றில் இருந்து காத்து, பார்வையை மங்கவிடாமல் பார்த்துக்கொள்பவை இவை. சிலருக்கு புருவ முடி இல்லாமல் இருக்கும்.
இது பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக காணப்படும். இதனை போக்க என்னத்தான் செயற்கை வழிமுறைகள் பின்பற்றினால் கூட சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.
அந்தவகையில் உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

- சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.
- வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.
- விளக்கெண்ணெயை விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும்.
- வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள். இதில் வைட்டமின் ஈ சத்து நிறைந்தால் உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும்.
- முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது.
- ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம்.
- வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
- இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும்.