தலைமுடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமா?

Report Print Kavitha in அழகு

நம் அனைவருக்குமே அடர்த்தியான, பொலிவான மற்றும் மென்மையான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

ஆனால் இன்றைய காலதில் ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

இதற்கு வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறை, மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்கள் போன்றவையே காரணங்களாகும்.

இதுபோன்ற பிரச்சினைகளை சமாளித்து கூந்தலை வேகமாக வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல ஒரு சில பொருட்கள் உதவுகின்றன.

அந்தவகையில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேவையானவை
  • செம்பருத்திப்பூ இலைகள் - 10
  • கறிவேப்பிலை - கைப்பிடியளவு
  • மருதாணி இலை - கைப்பிடியளவு
செய்முறை

செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.

அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும்.

மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.

viviscal

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்