முகத்தில் புள்ளி புள்ளியா இருக்கா? இதை செய்தால் போதும் ஓடிடும்!

Report Print Kavitha in அழகு

பொதுவாக சிலருக்கு முகத்தில் வெளிர் புள்ளிகள், பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும். சிலருக்கு முகம், கழுத்து பகுதியில் அதிகமாகவே இருக்கும்.

இதற்கு காரணம் உடலில் அதிகப்படியான மெலனின் உற்பத்தி ஆகும் போது இந்த புள்ளிகள் அதிகமாகவே இருக்கும்.

இவை சருமத்தில் எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்காது என்றாலும் அழகான முகத்தில் இவை அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கிவிடும்.

இவற்றை எளிய முறையில் நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும்.

அந்தவகையில் தற்போது அந்த முகத்தில் காணப்படும் இந்த அசிங்கமான புள்ளிகளை விரட்ட என்னென்ன பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • மஞ்சள் தூளில் எலுமிச்சை சாறு கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் தடவி விட வேண்டும். எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆனது சருமத்தின் பழுப்பு புள்ளிகளை மறைக்க செய்யும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்துவந்தாலே போதும்.

  • வறட்சியான சருமம் கொண்டிருப்பவர்கள் எலுமிச்சை பயன்படுத்தும் போது சிறிதளவு பன்னீர் சேர்க்கலாம். அல்லது நீர் சேர்ப்பதன் மூலம் வறட்சி அதிகரிப்பதை தடுக்கலாம்.

  • கெட்டித்தயிரை எடுத்து முகத்தில் தடவி இலேசாக மசாஜ் செய்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வட்ட வடிவில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளையாவது இதை செய்துவந்தால் புள்ளிகள் மந்தமாகி மறைய தொடங்கும்.

  • சுத்தமான தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி விட வேண்டும். குறிப்பாக புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் புள்ளிகள் காணாமல் போகும்.

  • சந்தன பவுடரையும் வேப்பிலை பவுடரையும் சம அளவு எடுத்து கலந்து இதனுடன் பன்னீர் கலந்து குழைத்து புள்ளிகள் இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காயவிடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவேண்டும். முகத்தில் புள்ளிகள் அதிகம் இருந்தால் தினமும் இதை செய்துவந்தால் இரண்டு வாரங்களில் பலன் கிடைக்கும்.

  • கற்றாழையை முள் நீக்கி நன்றாக கழுவி அப்படியே முகத்தில் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் புள்ளிகள் மந்தமாகி சருமம் பளீரென்று அழகாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்