சரும பிரச்சனைகளை சரிசெய்யணுமா? தக்காளியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Report Print Kavitha in அழகு
516Shares

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.

தக்காளி ஆரோக்கியத்திற்கு மற்றுமின்றி சரும பிரச்சினைகளையும் சரி செய்ய பெரிதும் உதவி புரிகின்றது.

அந்தவகையில் தற்போது தக்காளியை கொண்டு எப்படி சருமத்தை அழகுப்படுத்தலாம் என அங்கு பார்ப்போம்.

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து கழுவ வேண்டும். இது பருக்களால் வந்த தழும்புகளையும் மறையச் செய்யும்.

  • ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி கூழ் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வையுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க் சருமத்தை நீரேற்றம் செய்வதற்கும், சரும கருமையைப் போகுவதற்கும் உதவும்

  • பப்பாளியை அரைத்து அதில் சிறிது தக்காளி கூழ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் கறைகள் போன்று காணப்படும் திட்டுக்கள் நீங்குவதோடு, உங்கள் சருமத்திற்கு பிரகாசத்தையும் அளிக்கிறது.

  • ஒரு தக்காளியை அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சரும கருமையும் அகலும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்