அழகான சருமத்தை பெற வேண்டுமா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்

Report Print Kavitha in அழகு

பொதுவாக பெண்கள் எப்பொழுதுமே அழகாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

இதற்காக கடைகளில் கண்ட கண்ட கிறீம்கள் என்பவற்றை வாங்கி போடுவதை தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருப்பினும் இது முகத்திற்கு சில சமயங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

எந்தபக்கவிளைவுகளுமின்றி முகத்தை அழகாக மாற்ற ஒரு சில வீட்டில் இருக்கும் பொருட்கள் பெரிதும் உதவு புரிகின்றது.

அந்தவகையில் தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வாம்.

google

  • கடலைமாவு தலைமுடி மற்றும் முகம் இரண்டையும் அழகூட்டும். அந்த கடலைமாவுடன் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுடன் இருக்கும்.

  • கடலையை அரைத்து முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், வயது முதிர்ந்த தோற்றத்தைத் தவிர்த்து சருமத்தை அழகூட்டும்.

  • தயிர் சருமத்துக்கு சிறந்த மாய்ச்சரைஸராகவும் கரும்புள்ளிகளைப் போக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கும் தயிர் மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகத் திகழ்கிறது. தலைமுடியை மிருதுவாக வைத்திருப்பதோடு பொடுகுத்தொல்லையில் இருந்தும் விடுதலை தரும்.

  • எலுமிச்சையை சிறு துண்டாக வெட்டிக் கொண்டு அதை முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் நன்கு தேய்க்க வேண்டும். இது சருமத்துக்குப் பொலிவைத் தருவதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கவும் செய்யும்.

  • தேன் மிகச்சிறந்த ஆன்டி- பாக்டீரியலாகப் பயன்படுகிறது. இது எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது. அதனால் தயிர், லெமன், கடலைமாவு, தக்காளி, ஓட்ஸ் என எவற்றுடனும் தேனைச் சேர்த்து முகத்துக்குப் பயன்படுத்தலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்