அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் பச்சை திராட்சை! எப்படி பயன்படுத்தலாம்?

Report Print Kavitha in அழகு
1245Shares

திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குபவை.

அதில் பச்சை நிற திராட்சை அதிகம் புளிப்பு இல்லாமல், தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.

திராட்சைகளில் தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உள்ளன.

இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இது சரும பிரச்சினைகளையும் சரி செய்ய உதவி புரிகின்றது.

அந்தவகையில் பச்சை திராட்சை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

Google

  • தினமும் 4 திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.

  • எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சைதிராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.

  • பருத்தொல்லைக்கு பச்சை திராட்சைச் சாறு, இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.

  • தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றத்தை போக்க ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள்.

  • ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.

  • காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.

  • காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்