பொடுகு தொல்லையா? இதில் ஒன்றை பயன்படுத்தி பாருங்க

Report Print Kavitha in அழகு
366Shares

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

எண்ணெய் வடியும் தோல், வறண்ட தோல், தலை சுத்தம் செய்யாதல், தலைக்கு பயன்படுத்தும் அழகு சாதனங்கள் ஆகியவை காரணமாக பொடுகு ஏற்பட வாய்ப்புள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பொடுகு பாதிக்கிறது. அதிகமாக ஷாம்பூ பயன்படுத்தினால் கூட பொடுகு ஏற்படலாம்.

இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட சில எளிய வீட்டு பொருட்கள் உதவி புரிகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

கற்றாழை

கற்றாழை மடல்களை எடுத்து இரண்டாக வெட்டி மஞ்சள் நிற திரவம் நீங்கிய பிறகு அந்த ஜெல்லை மசித்து வைக்கவும்.

தலையை சுத்தம் செய்து ஸ்கால்ப் பகுதி முடியின் வேர்ப்பகுதி உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்.

பிறகு சுத்தமான நீரில் அலசி ஷாம்பு பயன்படுத்துபவர்கள் கற்றாழை சேர்த்து தயாரித்த ஷாம்பை பயன்படுத்தவும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை இதை செய்யலாம்.

ஆப்பிள்

ஆப்பிளை தோல் நீக்கி மசித்து அதில் ஆரஞ்சு சாறு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து உச்சந்தலையில் தேய்க்கவும்.

பிறகு 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்கவும். ஆப்பிள் பூஞ்சை கொல்லு போல் உச்சந்தலையில் இருக்கும் கிருமிகளை அழிப்பதால் பொடுகு நீங்குகிறது. பொடுகை பொறுத்து வாரத்து இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

​இஞ்சி

இஞ்சி சாறு - 4 டீஸ்பூன், பீட்ரூட் சாறு - 4 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து நீர் விடாமல் உச்சந்தலையில் முழுக்க மசாஜ் போல் தேய்க்கவும்.

இவை நன்றாக தலையில் ஊற வேண்டும்.இஞ்சி சாறு கூந்தலில் முழுமையாக இறங்க வேண்டும்.

அதனால் பகலை காட்டிலும் இரவுநேரங்களில் இதை கூந்தலில் தடவலாம். மறுநாள் காலை தலைக்கு குளிக்கலாம்.

தொடர்ந்து ஒரு வாரம் வரை இதை செய்துவந்தால் பொடுகு பிரச்சனை வேகமாக கட்டுக்குள் வருவதை பார்க்கலாம். பீட்ரூட் இல்லாமல் இஞ்சி சாறு மட்டும் கூட பயன்படுத்தலாம்.

​வேப்ப இலை

வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்க கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும்.

ஆனால் வேப்பிலை அதிக உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது கூந்தல் உதிர்வும் அதிகரிக்க கூடும். அதனால் வாரம் ஒரு முறை மட்டுமே இந்த முறையை செய்யலாம்.

பொடுகு கட்டுக்குள் வந்ததும் இரண்டு வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதும். அதே போன்று தலைக்கு குளிக்கும் போது வேப்ப இலைகளை நீரில் ஊறவைத்து அந்த நீரை கொண்டு தலைக்கு குளிக்கலாம்.

​பூண்டு

10 பல் பூண்டையும் 3 அல்லது 4 கிராம்பையும் இடித்து மைய அரைக்கவும். இதனுடன் தேன் 4 டீஸ்பூன் கலந்து நன்றாக குழைத்து கூந்தல் ஸ்கால்ப் பகுதி முதல் முழுவதுமாக தடவி விடவும்.

20 நிமிடங்கள் கழித்து விரல்களால் தலையை சொரிந்தபடி அலசி எடுக்கவும்.

பூண்டு பொடுகை நீக்குவதில் அதிக வலிமையோடு செயல்படும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை செய்யலாம்.

மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவை உச்சந்தலையில் தடவி நாற்றம் வராமல் இருக்க ஹேர் கவர் போடவும்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை அலசி எடுத்தால் பொடுகு போகும். ஒரு வேளை முட்டையின் நாற்றம் தொடர்ந்து இருந்தால் இரண்டு முறை ஷாம்பு கொண்டு நன்றாக அலசி எடுங்கள்.

துளசி

க்ரீன் டீ பேக் சேர்த்து ஊறவைத்த நீரில் துளசியை மசித்து அதில் நெல்லிப்பொடி கலந்து தலைக்கு தேய்க்கவும்.

மெதுவாக மசாஜ் செய்தபடி ஸ்கால்ப் பகுதி முழுக்க தடவ வேண்டும். பிறகு 30 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருந்து பிறகு தலைமுடியை அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை செய்தாலே போதுமானது.

வெந்தயம்

வெந்தயத்தை இரவு ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரில் அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும்.

இதை தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு சுத்தமான நீரில் ஷாம்பு இல்லாமல் அந்த பேஸ்டையே ஷாம்பாக்கி தேய்த்து குளித்தால் கூந்தலில் பொடுகும் போகும்.

கூந்தலும் சுத்தமாகும். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.

தயிர்

தயிர் இயற்கை ப்ளீச் போல் கூந்தலையும் கூந்தலில் இருக்கும் பொடுகையும் சுத்தம் செய்ய உதவுகிறது. கூடுதலாக கூந்தலுக்கு பொலிவையும் கொடுக்கிறது.

தயிரை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரம் இருமுறை கூட பயன்படுத்தலாம்.

குளிர்ச்சியாக இருக்கும் என்பவர்கள் இதனுடம் மிளகுத்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து பயன்படுத்தலாம். வாரம் இரும்றை இதை செய்யலாம்.

​நல்லெண்ணெய்

சுத்தமான நல்லெண்ணெயை தேவையான அளவு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து இலேசாக சூடு செய்யவும்.

அதை உச்சந்தலை, கூந்தலின் வேர், நுனி என அனைத்து இடங்களிலும் விடாமல் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு கூந்தலை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாக தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்