இளநீர் வெச்சு முகப்பருவை விரட்டலாம்.... எப்படி தெரியுமா?

Report Print Kavitha in அழகு
1475Shares

இளநீர் சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இவை உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதோடு சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் செய்கிறது.

குறிப்பாக முகப்பருவையும், வடுக்களையும் சருமத்தில் படியும் கறைகளையும் நீக்கும் சிறந்த பண்புகளை இளநீர் கொண்டிருக்கிறது.

இளநீரில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி மைக்ரோபியல் மற்றூம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை முகப்பருவினால் சருமத்துக்கு உண்டாகும் பாக்டீரியா நுண்ணியிர் மற்றும் அழற்சியிலிருந்து விடுபட உதவுகிறது.

இவை சருமத்தை சுத்தம் செய்வதோடு அதன் ஆழம் வரை சென்று சருமத்துளைகளின் உள்ளிருக்கும் கிருமிகளை வெளியேற்றுவதால் சருமத்தில் பாதிப்பு குறைகிறது.

அந்தவகையில் தற்போது இளநீரை எப்படியொல்லாம் முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

  • கற்றாழை ஜெல்லுடன் தேன் கலந்து மசிக்கவும். இதை இளநீருடன் சேர்த்து மேலும் ஒரு சுற்று சுற்றி முகம் முழுக்க தடவுங்கள். குறிப்பாக பருக்களால் வடுக்கள் இருக்கும் பகுதியில் தடவினால் பருக்கள் இருந்த இடத்தில் வடுக்கள் காணாமல் போகும்.

  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்,இளநீர் 8 டீஸ்பூன் இரண்டையும் நன்றாக கலந்து பஞ்சு உருண்டைகளை சேர்த்து முகத்தில் துடைத்து இலேசாக மசாஜ் செய்து ஊறவைக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச்சென்று இருக்கும். இரவு நேரங்களிலும் இதை முகத்துக்கு தடவலாம்.

  • காய்ச்சாத பசும்பாலுடன் சம அளவு இளநீர் கலந்து நன்றாக கலக்க வேண்டும். பஞ்சு உருண்டைகளை எடுத்து அதில் ஊறவைத்து நனைத்து பிறகு முகத்தில் எங்கெல்லாம் முகப்பருவின் தடங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தடவி ஊறவிடவும்.15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகம் இறுக்கமாக உணரும் போது முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து இதை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் போவதை பார்க்கலாம்.

  • இளநீரில் சர்க்கரை அல்லது ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வடுக்கள் இருக்கும் பகுதியில் இலேசாக ஸ்க்ரப் போல் செய்து மசாஜ் செய்யவும்.ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

  • இளநீரில் சர்க்கரை அல்லது ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வடுக்கள் இருக்கும் பகுதியில் இலேசாக ஸ்க்ரப் போல் செய்து மசாஜ் செய்யவும்.ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்