முகத்தில் இருக்கும் கரும்புள்ளி காணாமல் போக வேண்டுமா?

Report Print Kavitha in அழகு

பொதுவாக சருமத்தின் அழகை பாதிப்பதில் கரும்புள்ளிக்கு பெரிய பங்கு உள்ளது.

கிருமிகள் , இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் தங்கி கரும்புள்ளிகளாக வெளிப்படும்.

முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும்.

இந்த கரும்புள்ளிகளை எளிதால அகற்றி விடலாம். அதற்கு கல் உப்பு உதவி புரிகின்றது.

அந்தவகையில் கல் உப்பை வைத்து எப்படி கரும்புள்ளியை போக்கலாம் என பார்ப்போம்.

தேவை

  • பாசிப்பயறு மாவு - கால் கப்,
  • பால் - 3 டீஸ்பூன்,
  • உப்பு - 2 டீஸ்பூன் ( கல் உப்பு நசுக்கி சேர்க்கவும்)

செய்முறை

  • முதலில் மூன்றையும் சேர்த்து நன்றாக குழைத்து பத்து நிமிடங்கள் வரை உலரவைத்து கொள்ளவும்.

  • பிறகு முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் பேஸ்ட் போல் வைத்து தடவவும்.

  • அதன் பின் சருமத்தை உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

முக்கிய குறிப்பு

  • கல் உப்பு சருமத்துக்கு நல்லது செய்யும் ஆனால் இதை முகத்துக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

  • கல் உப்பு கூர்மையாக இருப்பதால் மென்மையான சருமத்தில் பாதிப்பையும் உண்டாக்கிவிடக்கூடாது.

  • கல் உப்புக்கு பதிலாக தூள் உப்பு பயன்படுத்தலாம் என்று நினைக்கவேண்டாம். கல் உப்பு தான் இடித்து பொடித்து பயன்படுத்த வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்