பொதுவாக கண்ணிற்கு அடுத்தப்படியாக நமது முகத்தில் அழகாக இருப்பது உதடுகள் தான். ஆனால் சிலருக்கு உதடுகள் மிகவும் கருமையடைந்து வறண்டு காணப்படும்.
உதடுகள் கருமையாக இருக்க பல காரணங்கள் உண்டு. அவை சூரிய ஓளி நேரடியாக முகத்தில் படுவது, பருவ நிலை மாற்றம், குறைந்த இரத்த ஓட்டம், மனச்சோர்வு, உதட்டுச்சாயத்தை அழிக்க மறப்பது, புகை பிடிப்பது, புகையிலை பழக்கம் போன்றவை.
இருப்பினும் இதனை தற்காலிகமாக மறைக்க லிப் பாம், லிப் ஸ்டிக், லிப் க்ளாஸ் என நிறைய பராமரிப்பு பொருட்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும் நிரந்தர அழகை தராது.
உதடுகள் பிங்க் நிறத்தில் இருக்க அதனை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும். அதற்கு இயற்கை பொருட்களை பெரிதும் உதவியாக இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது பிங்க் நிற உதட்டை பெற என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என பார்ப்போம்.
மாதுளை பழ விதைகள்
முதலில், 2 டேபிள் ஸ்பூன் மாதுளை பழ விதைகளை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனோடு, சிறிது மில்க் க்ரீம் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கலக்கவும். தயாரித்த அந்த கலவையை உதட்டில் தடவி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
பின்னர், சுத்தமான துணி கொண்டு துடைத்திடவும். இப்படி செய்திட, உதடு மிகவும் பளபளப்பாக, பிங்க் நிறத்தில் மாறிடுவதை பார்க்கலாம்.
சர்க்கரை
kylieskin
ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை எடுத்து, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதனோடு, அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை லிப் ஸ்கரப்பாக பயன்படுத்தி, உதட்டின் மீது தடவி தேய்க்கவும். இப்படி செய்வதனால், உதட்டின் மேற்பகுதியில் படிந்து இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கி விடும்.
ஸ்கரப் செய்ய பிறகு, உதட்டை தண்ணீர் கொண்டோ அல்லது துணி கொண்டோ சுத்தம் செய்திடவும். பின்னர், உதட்டின் மீது சிறிது தேங்காய் தடவி கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம் உதடு, பிங்க் நிறத்தில், ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்
womantalk
கற்றாழை செடியில் இருந்து ஒரு இலையை வெட்டி, அதற்கு நடுவே இருக்ககூடிய தசை பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
எடுத்த தசை பகுதியை நன்கு மசித்து பேஸ்ட்டாக செய்து கொள்ளவும். அத்துடன், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த கலவையை, இரவு தூங்குவதற்கு முன்பு உதட்டில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும்.
காலை எழுந்தவுடன், உதட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவும். இப்படி செய்வதன் மூலம், உதட்டில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிடும்.
இந்த முறையை முயற்சி செய்து பார்த்த பிறகு, உங்கள் உதட்டில் காணப்படும் வித்தியாசத்தை உணரலாம்.