சருமத்தில் உள்ள குழிகளை மறைக்க இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதுமே!

Report Print Kavitha in அழகு

பொதுவாக முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால், முக அழகை கெடுப்பதோடு, நிறைய சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

முகத்தில் யாருக்கு குழிகள் அதிகம் உள்ளதோ, அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும்.

இதனால் முகப்பரு போன்ற பிரச்சினைகளால் அதிகம் உருவெடுத்து முகத்தின் அழகை பாழாக்கிவிடும். எனவே இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்வது நல்லது.

முகத்தில் உள்ள குழிகளை மறைப்பதற்கான சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக்கொண்டு உங்கள் தோலில் வைத்து தடவினால் போதும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் சருமத்தின் ஆரோக்கியமும் அதிகமாகும்.

  • திறந்த துளைகளை சுருக்குவதற்கான சிறந்த வழிகளில் நீராவி முறையும் ஒன்றாகும். அதற்கு வாளியில் சூடான நீரை எடுத்துக்கொண்டு அவற்றின் முன் முகத்தை காட்டலாம். ஆனால் அவை அதிக வெப்பமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  • சர்க்கரையானது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் துளைகளில் இருந்து அதிகப்படியான எண்ணெயையும் வெளியேற்றுகிறது. உங்கள் துளைகளில் உள்ள அழுக்கை அகற்ற வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்யவும்.

  • ஆப்பிள் வினிகர் உங்கள் சறுமத்தை இறுக்குவதன் மூல துளைகளின் அளவை குறைக்கிறது. மேலும் சருமத்தின் pH நிலையை சரி செய்கிறது. இது உங்களை இளமையானதாகவும் குறைபாடு இல்லாததாகவும் உள்ளன.

  • ஒரு கிண்ணத்தில் முட்டை வெள்ளை கருவை எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தடவ வேண்டும். பிறகு அப்படியே முகத்தில் சிறிது நேரம் காய வைக்க வேண்டும். பின்னர் வெள்ளை கருவை மெதுவாக உறிக்கவும். இது முகத்தில் உள்ள பெரிய துளைகளை அகற்ற உதவும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்