ஆண்களையும் விட்டு வைக்காத முகப்பரு... எப்படி போக்கலாம்?

Report Print Kavitha in அழகு
259Shares

பெரும்பாலானோருக்கு முகத்தில் இருக்க கூடிய பிரச்சினை முகப்பரு தான்.

முகத்தில் பயன்படுத்தும் கிரீம்கள், ஹார்மோன்களின் மாற்றம், அதிகமான எண்ணெய் உணவுகள், சுற்றுசூழல் காரணத்தால், அதிக மன அழுத்தம் என இப்படி காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதன் தாக்கத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக படியான எண்ணெய் பசையை வெளியிட செய்து பருக்களை உருவாக்குகிறது.

இதனால் ஆண்களுக்கு பெண்களை போல் அவஸ்தைப்படுவதுண்டு. இதனை எப்படி போக்கலாம் என ஆண்களிடம் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில் ஆண்கள் முகப்பருவை எளிய முறையில் போக்க கூடி ஒரு சில குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம்.

  • முகப்பரு இருக்கும் இடங்களில் மட்டும் மனுகா தேனை பயன்படுத்தினாலே போதுமானது. இந்த தேனை முகப்பரு இருக்கும் இடங்களில் தடவி நன்றாக தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் மறையக்கூடும். தினமும் இதை செய்து வரலாம்.
  • தேயிலை எண்ணெயை நேரடியாக முகத்தில் பயன்படுத்தினால் குறிப்பாக முகப்பரு இருக்கும் போது அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். அதற்கு மாற்றாக அதனோடு வைட்டமின் இ ஆயில் அல்லது சமமான நீர் கலந்து பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும். முகப்பருக்கள் மறையகூடும்.
  • ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் ஒரு டீஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சு உருண்டையால் நனைத்து முகம் முழுக்க தடவலாம். இதை பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவ வேண்டும் என்றில்லை. ஆனால் ஆப்பிளின் புளிப்பு வாசனை உங்களை தொல்லை செய்தால் நீங்கள் அதை தவிர்ப்பது நல்லது.
  • கற்றாழையின் உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை மஞ்சள் திரவம் போக அலசி நன்றாக மசித்து ஜெல் போல் ஆக்கி முகப்பருக்களின் மீது தடவினால் பருக்கள் காணாமல் போகும். முகத்தில் பளபளப்பு கூடும். எண்ணெய் பசை குறையத்தொடங்கும்.
  • ஆண்கள் தயிருடன் சிறிதளவு தண்ணீர் கலந்து கெட்டியாக முகத்தில் தடவி பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் பருக்களோடு வீங்கிய சருமமும் சரியாக கூடும். தினமும் இதை செய்துவந்தால் விரைவில் பலனை எதிர்பார்க்கலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்